திமுக முன்னாள் எம்எல்ஏவின் 3 ஆண்டு சிறை தண்டனை ஒருமாதம் நிறுத்திவைப்பு – நீதிமன்றம் உத்தரவு

மனைவியை கொலை செய்ய முயன்ற வழக்கில் திருவாரூர் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ-வுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவரின் கோரிக்கையை ஏற்று தண்டனை ஒரு மாதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மனைவியை கொலை செய்ய முயன்ற வழக்கில் திருவாரூர் தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவரின் கோரிக்கையை ஏற்று தண்டனை ஒரு மாதம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு தன்னுடைய இரண்டாவது மனைவி ஹேமாவுடன் ஏற்பட்ட தகராறின் போது திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோகன் கைத்துப்பாக்கியை எடுத்து சுட்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக ஹேமா கொடுத்த புகாரின் பேரில் அசோகன் மீது சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.

இருதரப்பு வாதங்களும் நிறைவுற்ற நிலையில் அசோகனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இந்நிலையில் மேல்முறையீடு செய்யப்போவதால் தண்டனையை ஒரு மாதம் நிறுத்தி வைக்க வேண்டும் என அசோகன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதி தண்டனையை ஒரு மாதம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே