18 ஆண்டுகளுக்குப் பின் சபரிமலையில் மண்டல காலத்தில் படி பூஜை நடத்தப்பட்டது.
பத்து ஆண்டுகளுக்குப் பின் சபரிமலையில் மண்டல காலத்தில் படி பூஜை நடத்தப்பட்டது.
சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளது.
சபரிமலையில் நடக்கும் பூஜைகளில் முக்கியமான படி பூஜையின்போது 18 படிகளிலும் ஒரு மணி நேரத்திற்கு மேல் பூஜை நடக்கும்.
பூஜை நேரத்தில் பக்தர்கள் யாரும் படி ஏற முடியாது.
எனவே மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பக்தர்கள் அதிகம் வருவதாலும், அந்த நேரத்தில் படி பூஜை நடத்தினால் கூட்ட நெரிசல் ஏற்படுவதாலும் கடந்த 2001 ஆம் ஆண்டு மண்டல பூஜை காலங்களில் படி பூஜை நடத்தப்படுவது நிறுத்தப்பட்டது.
மாதபூஜை மற்றும் சிறப்பு பூஜை காலங்களில் படி பூஜை நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு கேரளாவில் வெள்ள பிரளயம் ஏற்பட்டதால் படி பூஜைகள் ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில் 18 ஆண்டுகளுக்கு மண்டல பூஜை காலமான தற்போது சபரிமலையில் படி பூஜை தொடங்கி உள்ளது.
மாலை 7 மணி முதல் 8 மணி வரை நடக்கும் படி பூஜை வரும் 24ஆம் தேதி வரை நடக்கிறது.
75 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் இந்த பூஜைக்கான முன்பதிவு வரும் 2036-ஆம் ஆண்டு வரை முடிந்து விட்டதாக கேரள தேவசம்போர்டு அறிவித்துள்ளது.