தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா, சினிமாவில் நுழையும் முன் டிவி சேனல் ஒன்றில் தொகுப்பாளராக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கேரளாவைச் சேர்ந்த நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா, ரஜினிகாந்த், ஆர்யா, தனுஷ், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்கள் பலருடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இடையில் சில வருடங்கள் சினிமாவில் சறுக்கினாலும், தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு இணையான ரசிகர் வட்டத்தை கொண்டுள்ளார்.
15 வருடங்களுக்கு மேல் சினிமாவில் சிறந்து விளங்கி வரும் நயன்தாரா, இந்த துறையில் வருவதற்கு முன் மலையாள தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளியாக இருந்துள்ளார்.
மலையாள சேனல் ஒன்றில் அவர் தொகுப்பாளராக இருந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
வீடியோவில் தன்னை டயானா என்று நயன்தாரா அறிமுகம் செய்கிறார். அவரின் நிஜப்பெயர் டயானா மரியம் குரியன் என்பது குறிப்பிடத்தக்கது.