உள்ளாட்சி தேர்தலில் பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநகராட்சி துணை மேயர், நகராட்சி மற்றும் கிராம பஞ்சாய்த்துகளின் துணை தலைவர் பதவிகளுக்கு பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டம் கொண்டு வரலாம் எனவும் 2012ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி இருந்தது.
இதன் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலில் பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இட ஒதுக்கீடு வழங்கும் வரை உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்க தடை விதிக்க வேண்டுமெனவும் கோரப்பட்டது.
இந்த மனுவை விசரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக தலைமை செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்துறை செயலாளர் மற்றும் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டதுடன் வழக்கை ஜனவரி மாதம் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.