கோத்தபயா ராஜபக்சேவுக்கு டெல்லியில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் கோத்தபய ராஜபக்சேவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், பிரதமர் மோடியும் வரவேற்றனர். அங்கு அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பும் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

பொருளாதார வளர்ச்சிக்காகவும், இரு நாட்டு மக்களின் பாதுகாப்புக்காகவும் இந்தியா-இலங்கை இணைந்து செயல்பட வேண்டும் என கோத்தபய ராஜபக்சே அப்போது கேட்டுக்கொண்டார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 409 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே