திமுக வேட்பாளர்கள் ராஜேஸ்குமார், கனிமொழி சோமு முதல்வர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல்..!!

2 மாநிலங்களவை தேர்தலுக்கு திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர்கள் டாக்டர் கனிமொழி சோமு, கே.ஆர்.என் ராஜேஷ்குமார் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் காலியாகவுள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. சட்ட பேரவைத் தேர்தலில் வேப்பனஹள்ளி தொகுதியில் கே.பி.முனுசாமி, ஒரத்தநாடு தொகுதியில் வைத்தியலிங்கம் வெற்றி பெற்றனர். எனினும், இருவரும் சட்ட சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தினால், தங்களது மாநிலங்களவை பதவியை ராஜினமா செய்தனர்.

இதனால், தமிழக்தில் காலியாகியுள்ள 2 மாநிலங்களவை இடங்களுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேட்பு மனு தாக்கல் செய்யவதற்கு நாளை கடைசி நாளாகும். இந்நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவை தேர்தலுக்கு திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர்கள் டாக்டர் கனிமொழி சோமு, கே.ஆர்.என் ராஜேஷ்குமார் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேர்தல் அதிகாரியும், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இந்த வேட்புமனு தாக்கல் செய்தபோது, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திருச்சி சிவா சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். 2022 ஜூனில் முடியும் வைத்துலிங்கத்தின் பதவிக்காக இடத்திற்கு ராஜேஷ்குமாரும், 2026 ஏப்ரலில் முடியும் கே.பி முனுசாமி பதவிக்கான இடத்திற்கு டாக்டர் கனிமொழி சோமு வேட்பு மனு தாக்கல் செய்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே