கோவாவில் இளைஞர்களுக்கு அரசு வேலை மற்றும் வேலையின்மை நிவாரணம் பற்றி முக்கிய அறிவிப்புகளை ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார்.
கோவாவில் ஆம் ஆத்மி கட்சி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
இந்நிலையில்,கோவாவில் வேலைகள் மற்றும் வேலையின்மை நிவாரணம் பற்றி முக்கிய அறிவிப்புகளை டெல்லி முதல்வரும்,ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:
- “கோவாக்களுக்கான வேலைகள், எம்எல்ஏவின் உறவினர்களுக்கு அல்ல.எனவே,கோவாவில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், ஊழல் செயல்களை நிறுத்தி,கோவாவின் ஒவ்வொரு வீட்டிலும் வேலைவாய்ப்புள்ள ஒரு இளைஞருக்கு அரசு வேலை வழங்க ஏற்பாடு செய்வோம்.
- வேலை கிடைக்கும் வரை அவர்களுக்கு மாதம் ரூ.3000 வேலையில்லாத் தொகை நிவாரணமாக வழங்கப்படும்.
- 80% வேலைகள் கோவா இளைஞர்களுக்கு ஒதுக்கப்படும்.
- 80% தனியார் வேலைகளையும் கோவா இளைஞர்களுக்கு ஒதுக்க நாங்கள் சட்டம் கொண்டு வருவோம்.
- கொரோனா காரணமாக சுற்றுலாவை வேலையை சார்ந்துள்ள குடும்பங்கள் வேலையில்லாமல் போனது, அவர்களின் வேலை மறுசீரமைப்பு செய்யப்படும் வரை அவர்களுக்கு மாதம் 5000 ரூபாய் வழங்கப்படும்.
- சுரங்கங்களை மூடுவதால் சுரங்கத்தை சார்ந்திருக்கும் குடும்பங்கள் அவதிப்பட்டு வருகின்றன, சுரங்கம் மீண்டும் தொடங்கும் வரை அவர்களுக்கும் மாதம் 5000 ரூபாய் வழங்கப்படும்”,என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,நீங்கள் “ஒரிஜினலுக்கு” வாக்களிக்கும்போது “டூப்ளிகேட்” க்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? என்றும் கூறியுள்ளார்.