அமமுகவுடன் கூட்டணி அமைத்தது தேமுதிக..; 60 தொகுதிகள் ஒதுக்கீடு..!!

அமமுகவும், தேமுதிகவும் தொகுதி உடன்பாடு கண்டுள்ளன. அதிமுகவுடன் கூட்டணி முறிந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்துடன் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் அதுவும் முறிந்த நிலையில் தேமுதிக அமமுகவுடன் தற்போது தொகுதி உடன்பாடு கண்டுள்ளது. 60 இடங்கள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் கடந்த மக்களவை தேர்தலில் இணைந்து போட்டியிட்டனர்.

அதில் அதிமுக தவிர மற்ற கட்சிகள் தோல்வியை தழுவின. சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி திமுக, அதிமுக இரண்டுக்கட்சிகளிலும் இழுபறி நீடித்த நிலையில் அதிமுக பாமக முதலில் உடன்பாடு கண்டது. பின்னர் திமுகவில் விசிக முதலில் உடன்பாடு கண்டது.

தொடர்ந்து பாஜக, தேமுதிக இழுபறி நீடித்த நிலையில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் என முடிவானது. 

ஆனால் தேமுதிக தங்களுக்கு 23 தொகுதிகள் தேவை என பிடிவாதம் பிடித்தது.

இதனால் கூட்டணி பேச்சு வார்த்தை முடிவடையாமல் நீடித்தது. திடீரென தேமுதிக அதிமுக கூட்டணி முறிந்தது என அறிவித்தது.

விஜயபிரபாகரன் அதிமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். இந்நிலையில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று ஒரு கருத்து எழுந்தது, மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி என்ற கருத்து எழுந்தது, அமமுகவுடன் பேசுகிறார்கள் என்றும் கூறப்பட்டது.

மக்கள் நீதி மய்யத்துடன் பேசவில்லை என தேமுதிகவினர் அறிவித்தனர். இந்நிலையில் இன்று காலை முதலே அமமுகவுடன் தேமுதிக பேசிவந்தது.

சுதீஷும் டிடிவி தினகரனும் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று மாலை அதிகாரபூர்வமாக இரு கட்சியினரும் சந்தித்து உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

அதன்படி அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 இடங்கள் என உறுதியாகியுள்ளது. வட, மேற்கு மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களை தேமுதிகவும்.

தென் கிழக்கு டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களை அமமுகவும் பிரித்துக்கொண்டுள்ளன.

இதன் மூலம் டிடிவி தினகரன் தலைமையை தேமுதிக ஏற்றுக்கொண்டுள்ளது.

அமமுகவிடம் 26 தொகுதிகள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் அமமுக வேட்பாளர்களை வாபஸ் பெற வைத்து தேமுதிகவுக்கு தொகுதிகளை ஒதுக்கியுள்ளனர்.

அமமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் 60 இடங்களுக்கான பட்டியல் வருமாறு:

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே