சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குறுதிகளை இன்று வெளியிட்டது அதிமுக.

அதிமுக- வின் தேர்தல் அறிக்கையை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் வெளியிட்டனர்.

அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ்:

1. அனைத்து குடும்பங்களுக்கும் அம்மா வாஷிங் மெஷின் வழங்கப்படும்.

2. அம்மா இல்லம் திட்டத்தில் அனைவருக்கும் வீடுகள் கட்டித் தரப்படும்.

3. வீட்டில் ஒருவருக்கு அரசு பணி

4. கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

5. விலையில்லா கேபிள் டி.வி. இணைப்பு வழங்கப்படும்

6. இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை

7. தமிழ் கட்டாய பாடமாக்கப்படும்

8. மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை.

9. மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கிடப்படும்

10. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும்

11. ரூ.25,000 மானியத்தில் எம்.ஜி.ஆர். பசுமை ஆட்டோ

12. மதுக்கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும்.

13. காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

14. இந்து ஆன்மிக பயணம், ஹஹ் ஜெருசலேம் பயணத்துக்கான கட்டணம் உயர்த்தி வழங்கப்படும்.

15. மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயர் சூட்டப்படும்.

16. கிராம பூசாரிகளுக்கான ஊக்க ஊதியம் உயர்த்தப்படும்.

17. மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கு பழைய சலுகையே தொடரும்.

18. நெசவாளர்களுக்கு ரூ 1 லட்சம் வரை கடன் தள்ளுபடி.

19. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

20. மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி ரூ. 2,500 ஆக உயர்வு.

21. அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு ரூ 10 ஆயிரம் வரை வட்டியில்லாக் கடன்.

22. வேலையில்லா இளைஞர்களுக்கான உதவித்தொகை இருமடங்காக உயர்த்தப்படும்.

23. மாவட்டந்தோறும் மினி ஐ.டி. பார்க் நிறுவப்படும்.

24. பழுதடைந்த அனைத்து மத ஆலயங்களும் புனரமைக்கப்படும்.

25. நாகை துறைமுகத்தில் இருந்து மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும்

26. கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2ஜிபி டேட்டா.

26. பள்ளி மாணவர்களுக்கு தினமும் 200 மி.லி. பால் அல்லது பால் பவுடர் வழங்கப்படும்.

முழுமையான தேர்தல் அறிக்கையை காண கீழே க்ளிக் செய்க

Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே