இன்று கவுரவ டாக்டர் பட்டம் பெறுகிறார் முதல்வர் பழனிசாமி

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது.

நிகர்நிலை பல்கலைக்கழகமான டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28 ஆவது பட்டமளிப்பு சென்னை வேலப்பன் சாவடியில் இன்று நடைபெறுகிறது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்தும் முதலமைச்சர், பின் மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கவுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே