அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிப்பது நல்ல முடிவு – துணைவேந்தர் சூரப்பா

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் முடிவு நிர்வாக ரீதியில் சிறந்த முடிவு என்று துணைவேந்தர் சூரப்பா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக கல்லூரியான அழகப்பா தொழிநுட்பக் கல்லூரியில் 75 வது ஆண்டு விழாவில் சூரப்பா பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் முன் கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் அரசு கேட்டு கவனத்தோடு செயல்பட வேண்டும் என்று கூறினார்.

பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதால் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க தமிழக அரசு தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் சூரப்பா வேண்டுகோள் விடுத்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே