ரூ.52 லட்சம் ஏடிஎம் பணம் கொள்ளை – கார் ஓட்டுநர் கைது

ஏடிஎம் மையத்தில் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட 52 லட்சம் ரூபாயை திருடிச் சென்றதாக கார் ஓட்டுனரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்று வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

அந்நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் 3 பேர் ஏடிஎம் மையங்களில் நிரப்புவதற்காக 87 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றனர்.

அம்புரோஸ் என்ற ஓட்டுநரின் காரில் பணத்தை எடுத்துக்கொண்ட ஊழியர்கள் வேளச்சேரி விஜயநகர் அலுவலகத்திற்கு வந்தனர்.

ஊழியர்கள் பணம் நிரப்பி கொண்டிருந்தபோது காரில் இருந்த 52 லட்சம் ரூபாய் பணத்துடன் ஓட்டுநர் அம்புரோஸ் தப்பி சென்றார்.

கடந்த வியாழக்கிழமை நடந்த இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரது உறவினர் வீட்டில் இருந்து 32 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மன்னார்குடியில் பதுங்கியிருந்த அம்புரோஸை கைது செய்தனர்.

மொத்த பணத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரை சென்னைக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே