இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்..!!

பேண்டமிக் காலகட்டத்தினால் இந்த ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெற்றது. இதன் முடிவுகளை தற்போது அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கிறது.

இறுதியாண்டு மாணவர்களைத் தவிர்த்து, மற்றவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்திருந்தது பல்கலைக்கழகம்.

இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 24 முதல், இளங்கலை மற்றும் முதுகலை இறுதி செமஸ்டர் தேர்வுகள் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் உதவியுடன் நடத்தியது அண்ணா பல்கலைக்கழகம்.

செப்டம்பர் 29-ம் தேதி வரை நடைபெற்ற இந்த தேர்வில், 30 மதிப்பெண்களுக்கு ஒரு மணிநேரம் ஒதுக்கப்பட்டது.

தொழில்நுட்ப கோளாறால் சரியாகத் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பினையும் அளித்தது பல்கலைக்கழகம்.

அதன் விடைகள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு, தற்போது ஆன்லைனில் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.

www.annauniv.edu என்ற தளத்தில் சென்று முடிவுகளைப் பார்த்துக்கொள்ளலாம்.

‘மல்டிபிள் சாய்ஸ்’ கேள்விகள் மட்டுமே இடம்பெற்ற இந்த ஆன்லைன் தேர்வின் மதிப்பெண்களிலிருந்து 30 சதவிகிதம் மட்டுமே இறுதியாண்டு முடிவில் சேர்த்துக்கொள்ளப்படும்.

50 சதவிகிதம் ஏற்கெனவே இருக்கும் சிஜிபிஏவிலிருந்தும் 20 சதவிகிதம் ‘இன்டெர்னல்’ மதிப்பீடுகளிலிருந்தும் எடுத்துக்கொள்ளப்படும்.

இந்தத் தேர்வில் அதிகளவில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே