ஒரு சாம்ராஜ்ஜியத்தை மறுகட்டமைக்கும்போது – KGF-2 யஷ்!

மாநில எல்லை வித்தியாசங்கள் இல்லாம இந்தத் தலைமுறை எல்லாத்தையும் மாத்துவோம் என KGF நாயகன் ராக்கிங் ஸ்டார் யஷ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் விருது விழா ஒன்றில் பேசிய KGF நாயகன் யஷ், தமிழ் மக்களின் அன்பு கிடைக்கிறது கஷ்டம். ஆனா எனக்குக் கிடைச்சிருக்கு.

இந்தத் தலைமுறையினருக்கு ஒண்ணு சொல்றேன். நமக்குள்ள ஆந்திரா, கன்னடா, தமிழ்-னு வித்தியாசம் இருக்கவே கூடாது. எல்லரும் இந்தியர்கள்.

அந்தப் பழைய எல்லை அரசியலை எல்லாம் விட்டுடுங்க. நாம மாத்தலாம். இந்தியாவின் எந்த மூலையில யாரு சாதிச்சாலும் அது இந்தியரின் சாதனையாத் தான் பார்க்கணும்.

தமிழ் சினிமா துறை மேல எனக்குப் பெரிய நம்பிக்கை இருக்கு. இந்திய சினிமாவுல பெரிய பங்களிப்ப நீங்க கொடுக்கணும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கே.ஜி.எஃப் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு.

ஒரு சாம்ராஜ்ஜியத்தை மறுகட்டமைக்கும்போது என்ற வாசகத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பலரும் சலாம் ராக்கி பாய் என்று பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே