செமஸ்டர் தேர்வு முறையில் மாற்றமில்லை – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..!!

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு எழுத்துத்தேர்வாகவே நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி,கல்லூரிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்தன. தற்போது தொற்று பரவல் குறைந்து வரும் பட்சத்தில் படிப்படியாக பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் தற்போது பொறியியல் கல்லூரிகள், மீண்டும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலகட்டத்தில் மாணவர்களின் கற்றல் திறனில் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.

இதை அடிப்படையாகக் கொண்டு பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு எழுத்துத் தேர்வாகவே நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஆன்லைனில் தேர்வுகளை நடத்த வேண்டும் என தனியார் பொறியியல் கல்லூரிகள் விடுத்த கோரிக்கை இதன்மூலம் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முறையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் இது நேரடியாகவே நடைபெறும் எனவும் பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆன்லைனில் வகுப்புகள் நடத்திவிட்டு ஆஃப்லைனில் தேர்வு வைத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் போராடியதை தொடர்ந்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே