விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டதாக நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கம் தற்போது கலைக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தனது பெயரை பயன்படுத்தி பொதுக்கூட்டங்களை நடத்த தந்தை சந்திரசேகர், தாய் சோபா உள்பட விஜய் மக்கள் இயக்கத்தினருக்குத் தடை விதிக்கக்கோரி விஜய் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், இது தொடர்பான பதில் மனுவை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று தாக்கல் செய்தார். இதில் விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே