டிசம்பர்-7ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தல் தேதி வரும் ஏழாம் தேதிக்குள் உறுதியாக அறிவிக்கப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் கடந்த 3 ஆண்டுகளாக தள்ளிப்போகும் நிலையில் இம்மாத இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அனைத்துக் கட்சிகளையும் அழைத்து மாநிலத் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், ஊரக பகுதிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த அவசரச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தவார இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்போம் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதால் சனிக்கிழமைக்குள் செய்தியாளர்களை அழைத்து அதிகாரப்பூர்வமாக தேதியை அறிவிப்போம் என்று தமிழகத் தேர்தல் ஆணையர் பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார். 

தொகுதி மறுவரையறை செய்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என தி.மு.க சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே