2-ம் தலைநகரை உருவாக்க வேண்டும் என்பது அரசின் கருத்தல்ல என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது; உலக அளவில் பரவிய கொரோனா தொற்று தமிழ்நாட்டில் பரவியது அரசு எடுத்த நடவடிக்கைகளாலால் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 1,064 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் 37,501 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, 2 பரிசோதனை மையங்கள் உள்ளன.
நோய் தடுப்புக்கு தேவையான உபகரணங்கள் போதிய அளவில் இருப்பு உள்ளது. காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டதால் கொரோனா வைரஸ் தொற்று குறைந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கமே மக்களை தேடிச்சென்று குறைகளை தீர்க்க குறைதீர் முகாம் நடத்துகிறது. குடிமராமத்து திட்டம் மூலம் நீர்நிலைகள் தூர்வாரப்படுத்தல், தடுப்பணைகள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிறது.
பசுமை வீடுகள் திட்டம், பிரதமரின் குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 4,111 மகளிருக்கு ரூ.10.2 கோடியில் இருசக்கர வாகன மானியம் வழங்கப்பட்டுள்ளது.
2020-21-ம் ஆண்டில் நுண்ணுயிர் பாசன திட்டத்திற்கு ரூ.95.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏழை விவசாயிகளை மேம்பட்டுத்த விலையில்லா ஆடு, மாடுகள், கோழிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சேலம் வாணியம்பாடி திருப்பத்தூர் சாலையை 4 வழித்தடமாக மாற்றும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அமைச்சர் அன்பழகன் வேண்டுகோளை ஏற்று தருமபுரியில் சட்டக்கல்லூரி கட்டுவதற்கான பணிகள் நடக்கிறது. இவ்வாறு தெரிவித்தார்.