ஜெ.தீபாவின் மனுவுக்கு பதிலளிக்க இயக்குநர் கவுதம் மேனனுக்கு உத்தரவு!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக வெளியிட தடைகோரிய ஜெ.தீபாவின் மனுவுக்கு பதிலளிக்க இயக்குநர் கவுதம் மேனனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை குயின் என்ற தலைப்பில் இயக்குநர் கவுதம் மேனன் இணையதள தொடராக இயக்கி வருகிறார்.

இந்நிலையில் தம்முடைய அனுமதி பெறாமல் இந்த இணையதள தொடர் எடுக்கப்படுவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கும், வாழ்க்கைக்கும் பாதிப்பில்லாமல் திரைக்கதை எழுதப்பட்டுள்ளதா? என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் தமக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே தம்முடைய அனுமதியில்லாமல், குயின் இணையதள தொடரை திரையிடவும், விளம்பரப்படுத்தவும் தடை கோரி அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தீபாவின் மனுவுக்கு பதில் அளிக்க இயக்குனர் கவுதம் மேனனுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே