வெள்ளித்திரையில் மீண்டும் ‘பி.எம்.நரேந்திர மோடி’ திரைப்படம்..!!

பிரதமர் மோடியின் அரசியல் வாழ்வினை சித்தரிக்கும் படமான ‘பி.எம்.நரேந்திர மோடி’ வரும் அக்.,15ம் தேதி மீண்டும் வெளியாகிறது.

கடந்தாண்டு லோக்சபா தேர்தலுக்குப் பிறகு மே மாதம் 24ம் தேதி வெளியான இப்படத்தை சந்தீப் சிங் தயாரிக்க ஓமங் குமார் இயக்கி இருந்தார்.

அதில் நரேந்திர மோடி வேடத்தில் விவேக் ஓபராய் நடித்திருந்தார்.

இப்படம் 23 மொழிகளில் உருவாகி இருந்தது.

இந்நிலையில் லாக்டவுனுக்குப் பிறகு வரும் அக்.,15 முதல் இப்படம் மீண்டும் திரைக்கு வருவதாக தயாரிப்பாளர் தரப்பில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இந்த படம் மீண்டும் வெளியாவது குறித்து பேசிய சந்தீப் சிங், ‘ படத்தை இரண்டாவது முறையாக வெளியிடுவது எனக்கு பெருமை தரும் விஷயம். 

சென்ற முறை பல காரணங்களால் பெரும்பாலானவர்கள் இத்திரைப்படத்தை காண முடியவில்லை.

இம்முறை இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்’ இவ்வாறு அவர் கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே