சூப்பர் டாக்கீஸ் புரொடக்ஷன் மற்றும் அவதார் புரொடக்ஷன் வழங்கும் “போடா முண்டம்” என்ற படம் விரைவில் வெளியாகவுள்ளது.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ராமர், கதாநாயகனாக நடித்து வரும் புதிய படத்திற்கு யாரும் எதிர்பார்த்திராத தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
இவருக்கு ஜோடியாக சஞ்சனா கல்ராணி நடித்து வருகிறார்.
கற்பனை, காமெடி, திரில்லர் கலந்து உருவாகும் இந்த புதிய படத்தை நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மணி ராம் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
ஜபீஸ் கே கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. விறுவிறுப்பாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இப்படத்திற்கு போடா முண்டம் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
மேலும் இதன் டைட்டில் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.