திண்டுக்கலில் பழைய 10 பைசா நாணயத்திற்கு டி-சர்ட்

திண்டுக்கல்லில் தனியார் துணிக்கடை ஒன்றில் பழைய பத்து பைசா நாணயத்திற்கு 200 ரூபாய் மதிப்புள்ள டீசட் வழங்கப்பட்டது.

திண்டுக்கல்லில் பழைய நினைவுகளை புதுப்பிக்கும் வகையில் ஐந்து பைசா, பத்து பைசா நாணயங்களுக்கு கடைகளில் சாப்பாடு, துணிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று திண்டுக்கல் சந்து கடை பகுதியில் உள்ள சவுண்டம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள தனியார் துணிக்கடையில் பழைய பத்து பைசா நாணயத்திற்கு 200 ரூபாய் மதிப்புள்ள டீசர்ட் வழங்கப்பட்டது.

தகவலறிந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகாலை முதலே அந்த கடைக்கு வந்தனர்.

டோக்கன் முறையில் 200 பேருக்கு 10 பைசாவுக்கு டி-ஷர்ட் வழங்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே