கரூரில் நேரு யுவகேந்திரா சார்பில் ஆரோக்கிய இந்தியாவை வலியுறுத்தி சைக்கிள் பேரணி

கரூரை அடுத்த தாந்தோணிமலையில் மத்திய அரசின் நேரு யுவகேந்திரா கரூர் மாவட்ட அமைப்பின் சார்பில் ஆரோக்கிய இந்தியாவை வலியுறுத்தி இளைஞர்களுக்கான சைக்கிள் பேரணி நடைபெற்றது.

கரூர் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு ஆரோக்கியராஜ் பேரணியில் கலந்துகொண்டு பாரதப் பிரதமரின் ஆரோக்கிய இந்தியா திட்டத்தின் முக்கியத்துவம் பற்றியும், நேரு யுவகேந்திரா மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும் கூறி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட நேரு யுவகேந்திராவின் கணக்காளர் ஜெயபிரகாஷ் மற்றும் கரூரில் செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்புகள் கலந்து கொண்டன.

பேரணியானது தாந்தோணிமலை பாரத ஸ்டேட் வங்கியில் ஆரம்பமாகி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று, மீண்டும் பாரத ஸ்டேட் வங்கியை அடைந்தது.

நகரம் மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்த நேரு யுவகேந்திரா அமைப்பை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

பேரணியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு டீ மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது.

நமது செய்தியாளர் : மு.மணிகண்டன்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே