திண்டுக்கல் – சபரிமலை இடையே புதிய ரயில்பாதை -அதிமுக எம்.பி கோரிக்கை

திண்டுக்கல் – சபரிமலை இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என அதிமுக எம்.பி. ஓ.ரவீந்திரநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களவையில் பேசிய அவர் இத்திட்டத்திற்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்து அறிக்கை தாக்கல் செய்ததாக குறிப்பிட்டார்.

ஆனால் தற்போது எந்த விதமான முன்னேற்றமும் இதில் ஏற்படவில்லை என்றார்.

புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டால் தமிழகத்தில் உள்ள மூன்று மாவட்ட மக்கள் மற்றும் சபரிமலை செல்லும் பக்தர்கள் பயன்பெறுவார்கள் என்றும், எனவே தாமதமின்றி திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே