JUST NOW : முதல் பகலிரவு டெஸ்ட் : வங்கதேச அணி பேட்டிங் தேர்வு…

இந்தியாவில் நடைபெறும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தா, ஈடன் கார்டன் மைாதனத்தில் தொடங்கியது.

இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணியில் எந்த மாற்றமுமில்லை என்றாலும், வங்கதேச அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

தைஜூல், மெஹடி ஹாசன் நீக்கப்பட்டு நயீம் ஹசன், அல்-அமீன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி ஆரம்பிக்கும் முன் இரு அணி வீரர்களையும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கைகொடுத்து பாராட்டு தெரிவித்தனர்.

இதன்பின் வங்கதேச பிரதமர் மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மணியை அடித்து பகலிரவு டெஸ்ட் போட்டியை ஆரம்பித்து வைத்தனர்.

இந்திய அணியின் மூத்த பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா முதல் ஓவரை வீசினார்.

இதன் மூலம் பிங்க் பந்தில் முதன்முறையாக பந்துவீசய இந்திய பவுலர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே