திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் பிறந்தநாளையொட்டி மு.க. ஸ்டாலின் மரியாதை..!!

திமுக முன்னாள் பொதுச் செயலாளர் மறைந்த க.அன்பழகனின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று காலை, கீழ்பாக்கம் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார்.

அவருடன், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., உள்ளிட்ட திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் – மாவட்டக் கழகச் செயலாளர்/பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செய்தனர்.

இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, மு.க.ஸ்டாலின், சென்னை, அயனாவரத்தில் உள்ள டபிள்யூ.பி.சௌந்தராஜன் மேல்நிலைப் பள்ளியில், க. அன்பழகன் பிறந்தநாளினை முன்னிட்டு, 100 கல்லூரி மாணவியர்க்கு கல்வி உதவித் தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழாவில், கலந்து கொண்டு கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உபகரணம் மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே