பேட்ட படத்துக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
வொய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்துக்கு ஜகமே தந்திரம் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
மே 1 அன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.