ரஜினியின் தர்பார் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை!

ரஜினிகாந்த் நடித்து திரைக்கு வந்துள்ள தர்பார் திரைப்படத்தை இணைய தளங்களில் வெளியிட தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில், லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தர்பார் படத்தை இணையத்தளங்களில் வெளியிட தடைக்கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன்,
தர்பார் திரைப்படத்தை 1370 இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே