நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது

நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. 

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருந்த மாநாடு திரைப்படத்தில் இருந்து நடிகர் சிம்பு நீக்கப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முன்பு அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் விடுத்திருந்த அறிக்கையில், எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிகழ்ந்ததே தவிர படம் தொடங்கவில்லை என தெரிவிருந்தார்.

இதனால் சிம்பு நடிக்க இருந்த மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை என குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில் மீண்டும் சிம்பு- சுரேஷ் காமாட்சி இடையே புதிய ஒப்பந்தம் ஏற்பட்டு, மாநாடு படத்தில் தான் நடிப்பதாகவும், படப்பிடிப்புக்கு சரியான ஒத்துழைப்பு தருவதாகவும் உறுதியளித்தார்.

சில நாட்களுக்கு முன்பு மாநாடு படத்தில் நடிக்கவுள்ள கலைஞர்களின் போஸ்டர்களை வெளியிட்ட பட்டையை கிளப்பியது மாநாடு படக்குழு.

நீண்ட இழுபறிக்குப் பின் பிப்ரவரி 27ம் தேதியன்று படப்பிடிப்பைத் தொடங்குவது என படக்குழு தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில் படப்பிடிப்பை முன்கூட்டியே தொடங்கலாம் என சிம்பு தெரிவித்ததால், இன்றைய தினம் படப்பிடிப்பை படக்குழு தொடங்குகிறது.

முதற்கட்டமாக சென்னை புறநகரில் 50 நாட்கள் சூட்டிங் நடைபெறும் எனவும், படத்தை ஜூன் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே