திருநங்கைகளுக்கு தையல் இயந்திரத்தை வழங்கி‌ய தனுஷ் ரசிகர்கள்

அசுரன் திரைப்படத்திற்கு பேனர் வைப்பதை தவிர்த்த நெல்லையை சேர்ந்த தனுஷ் ரசிகர்கள், அதற்கு பதிலாக திருநங்கைகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி உள்ளனர்.

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிர் இழந்ததை அடுத்து, திரைப்பட நடிகர்களின் ரசிகர்கள் பேனர்கள் வைப்பதை தவிர்த்து விட்டு, அந்த பணத்தை சமூக பணிகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், தையல் எந்திரம் வழங்கவேண்டுமென தனுஷ் ரசிகர்கள் முடிவெடுத்தனர்.

அதன்படி தையல் எந்திரங்களை நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் திருநங்கைகளுக்கு வழங்கினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே