பொன்மகள் வந்தாள் திரை விமர்சனம்

பல்வேறு தடைகளுக்கு பிறகு அமேசான் வலைதளத்தில் நேற்று வெளியானது பொன்மகள் வந்தாள். சூர்யாவின் மனைவி ஜோதிகா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கிட்டத்தட்ட ஒவ்வொரு படத்திலும் தனித்தன்மை வாய்ந்த கேரக்டராக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி வந்த ஒரு படம்தான் பொன்மகள் வந்தாள்.

தற்போது கதைக்குள் செல்லலாம். 2004ம் ஆண்டு ஒரு சம்பவம் நடக்கிறது. ஊட்டியில் தொடர்ச்சியாக ஐந்து குழந்தைகள் கொல்லப்படுகின்றனர். அதனை தாண்டி இரண்டு இளைஞர்களும் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர். இதனையெல்லாம் செய்தது ஜோதி என்ற சைக்கோ பெண்தான் எனக்கூறி போலீசார் அவரையும் கொன்று விடுகின்றனர்.

This image has an empty alt attribute; its file name is 142069-suewjlypgq-1590703118-1024x538.jpg



அதன் பின்னர் 15 வருடங்கள் கழித்து ஜோதி எந்த தவறும் செய்யவில்லை என பாக்கியராஜ் இதற்காக வழக்கு தொடுக்கிறார். அந்த வழக்கை பாக்யராஜ் மகள் ஜோதிகா எடுத்து நடத்துகிறார். ஜோதிக்கும் ஜோதிகாவிற்கும் என்ன தொடர்பு? இறுதியில் ஜோதிக்கு நியாயம் கிடைத்ததா? வழக்கு வெற்றிகரமாக முடிந்ததா? என்பதுதான் கதை.

படத்தின் பாசிட்டிவ்

முதன்முதலாக ஒரு பெரிய பட்ஜெட் படம் OTTஇல் வெளிவந்துள்ளது. இது தமிழ் சினிமாவையும், தமிழ் சினிமா ரசிகர்களையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் எனலாம். எல்லோரும் எதிர்பார்த்தது போலவே ஜோதிகா தனது நடிப்பில் அட்டகாசமாக வாழ்ந்து இருக்கிறார். வலி, வேதனை, ஆற்றாமை, துயரம், அழுகை, பதற்றம் என அனைத்து உணர்வுகளையும் தனது நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார் ஜோதிகா.

This image has an empty alt attribute; its file name is jyotika-ponmagala-759.jpg

இது படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ். நீதிமன்ற வளாகத்தில் பார்த்திபனை எதிர்த்து அவர் வாதாடும் காட்சிகள் எல்லாம் தியேட்டரில் விசில் பறந்தது.

முதல் பாதி விறுவிறுவென செல்ல யார் இந்த ஜோதி என்ற கேள்வி நமக்குள் தொற்றிக்கொள்கிறது. இரண்டாவது பாதியில் இந்த கேள்விக்கான விடைகள் எல்லாம் மெல்லமெல்ல வெளிவருகிறது. கிளைமாக்ஸ் ட்விஸ்ட் அதிரவைக்கிறது. நீதிபதியாக வரும் பிரதாப் அனைவரையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறார்.

ராம்ஜியின் ஒளிப்பதிவு வசந்தாவின் இசை ரூபனின் எடிட்டிங் எல்லாம் கச்சிதமாக அமைந்துள்ளது. மைனஸ் என்று சொல்லப் போனால் நீதிமன்ற வளாகத்தில் வாதிடும் காட்சிகளை நாம் கடந்த 50 வருடங்களாக பல தமிழ் படங்களில் பார்த்திருக்கிறோம். இந்த காலகட்டத்திலும் அதனைப் போன்றே, குருக்கு கேள்விகள் எல்லாம் வருகிறது. இவை எல்லாம் இந்த காலத்திலும் நீதிமன்ற வளாகத்தில் நடக்கிறதா என்று பார்த்தால் கேள்விக்குறிதான்.

படத்தை எடுத்த இயக்குனர் நீதிமன்ற வளாகத்திற்கு சென்று ஒரு வாரமாவது ஆய்வு செய்து இருக்கலாம். பெற்றோர்கள் பெண்களுக்கு எப்படி எது தவறு எது சரி என்று சொல்லி கொடுக்கிறோமோ. அதே போல் ஆண்களுக்கும் பெண்களைப் பற்றிய புரிதல்களை சிறுவயதிலேயே வளர்த்துவிட வேண்டும் என்பதை மிகத் தெளிவாக படம் சொல்லியிருக்கிறது மொத்தத்தில் படம். ஜோதிகாவின் வெற்றி.

Related Tags :

Ponmagalvandhal| Jothika

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே