ஜெ.இல்லத்தை அரசுடைமையாக்க தடைக்கோரி தீபா வழக்கு… ஆக.12ல் விசாரணை..!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமையாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் ஜெ.தீபா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது. ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை நினைவில்லமாக்குவதற்கு, 24 சதுர அடி பரப்பு கொண்ட வேதா இல்லம் அமைந்துள்ள இடத்திற்கு 68 கோடி ரூபாய் இழப்பீடு நிர்ணயித்து அரசு கையகப்படுத்த உத்தரவும் பிறப்பித்தது.

இந்த உத்தரவின்படி 68 கோடி ரூபாய் நீதிமன்றத்தில் செலுத்தி வேதா நிலையம் இல்லத்தை அரசுடைமையாக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இழப்பீட்டு தொகை பெற வேண்டிய உரியவர்கள் சிவில் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

இந்த நிலையில் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை எதிர்த்தும், இழப்பீடு நிர்ணயித்த உத்தரவை எதிர்த்தும் தீபா, தீபக் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு இரு நீதிபதிகள் கொண்ட விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த இரு வழக்குகளும் வருகின்ற 12ம் தேதி நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே