புதுப்பேட்டை பட தயாரிப்பாளர் வி.சுவாமிநாதன் கொரோனாவால் மரணம்!

திரைத்துறையைச் சேர்ந்த லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான சுவாமிநாதன் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார்.

அவரது மறைவு திரைத்துறை வட்டாரத்தில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சினிமா பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தை 3 பேர் இணைந்து நடத்தி வந்தனர்.

அதில், வி.சுவாமிநாதனும் ஒருவர். தயாரிப்பாளர் மட்டும் இன்றி ஒரு சில படங்களிலும் இவர் நடத்திருக்கிறார்.

பாஸ் (எ) பாஸ்கரன் படத்தின் மூலம் அறிமுகமான இவரது மகன் அஸ்வினுக்கு, ஊரடங்கு காலத்தில் தான் சுவாமிநாதன் திருமணம் செய்து வைத்தார்.

இந்த நிலையில், இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு உறுதியானதால் கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். 

இவரது மரணம் தமிழ் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் கொரோனாவால் ஏற்பட்ட முதல் மரணம் இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே