ஏ.ஆர்.முருகதாஸ் – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் படம் தர்பார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தர்பார் படத்தின் தீம் மியூசிக் மற்றும் வீடியோ போஸ்டர் இன்று வெளியாகும் என்று சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாக இருக்கிறது.
தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் வெளியிட உள்ளார்கள்.
தர்பார் படத்தின் தமிழ் மோஷன் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிடுகிறார்.
தர்பார் படத்தின் மலையாள மோஷன் போஸ்டரை நடிகர் மோகன்லால் வெளியிடுகிறார்.
தர்பார் படத்தின் தெலுங்கு மோஷன் போஸ்டரை நடிகர் மகேஷ் பாபு வெளியிடுகிறார். முதலில் கமல்ஹாசன் வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தர்பார் படத்தின் இந்தி மோஷன் போஸ்டரை நடிகர் சல்மான் கான் வெளியிடுகிறார்.
தர்பார் படம் 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது