கடலூர், விழுப்புரத்தில் இரவு 8 மணிக்குள் மின்விநியோகம் வழங்கப்படும் – மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி

நிவர் புயல் காரணமாக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இரவு 8 மணிக்குள் 80% விநியோகம் வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேட்டியளித்துள்ளார்.

மேலும், அவர் கூறியதாவது:

தமிழக மின்வாரியம் தனியார் மயமாக்கப்படாது.

புயல் காரணமாக மின்வாரியம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

மேலும், தற்போது புயலால் இதுவரை ரூ.1.30 கோடி வரை சேதம் ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் இரவு 8 மணிக்குள் மின் வினியோகம் வழங்க நடவடிக்கை

மின் கம்பங்களை சீரமைக்க துரித நடவடிக்கை

கடலூர் மாவட்டத்தில் 28 இடங்களில் மட்டுமே மின் வினியோகம் கொடுக்க வேண்டும்

சென்னையில் 177 இடங்களில் மின் வினியோகம் கொடுக்க வேண்டும்

இன்று இரவுக்குள் மின் வினியோகம் முழுமையாக சீரமைக்கப்படும்

சென்னையில் இரவு முழுவதும் மக்கள் தொடர்பு கொண்டனர்

உடனடியாக மின்சாரம் கொடுக்க நடவடிக்கை

வெள்ள சேதம் மதிப்பு முழுமையாக வரவில்லை

1912 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால் உடனே நடவடிக்கை

இரவுக்குள் 80 சதவிகிதம் மின் வினியோகம் சீரமைக்கப்படும் என தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே