நிவர் புயல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை புறநகர் சிறப்பு ரயில் சேவை தொடக்கம்..!!

சென்னையில் நிவர் புயல் காரணமாக, கனமழை பெய்யக்கூடு என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டிருந்த புறநகர் ரயில் சேவை துவக்கம்.

சென்னையில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோருக்காக புறநகர் ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து, நிவர் புயல் காரணாமாக, பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புறநகர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது நிவர் புயல் கரையை கடந்துள்ள நிலையில், தற்போது 3 மணியில் இருந்து இரவு 8 மணி வரை ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே