காலில் விழுந்து கேட்கிறேன்… வெளியே மட்டும் வராதீங்க..! – கண்ணீர் விடும் போலீஸ்… (VIDEO)

சென்னை அண்ணாசாலை காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் சாலையில் வருபவர்களை கையெடுத்து கும்பிட்டு தயவு செய்து வெளியே வராதீர்கள் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

197 நாடுகளுக்கு பரவிய கொரோனாவால் உலகளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,21,413ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தை பொருத்தவரை 18 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் குணமடைந்தார்.

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 54 வயது நபர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதனிடையே, தமிழகத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனால் அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியே நடமாட முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.

ஆனாலும் பல்வேறு காரணங்களை கூறி சிலர் சாலையில் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை அண்ணாசாலை காவல் உதவி ஆய்வாளர் ரசீத், சாலையில் வருபவர்களை கையெடுத்து கும்பிட்டு தயவு செய்து வெளியே வராதீர்கள் என கோரிக்கை விடுத்தார்.

மேலும், உங்கள் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். வெளியே யாரும் வராதீர்கள் என கண்ணீர் வடித்து கேட்டு கொண்டார்.

உங்களை வீட்டில் தான் இருக்க சொல்கிறோம். வேறு எதுவும் உங்களிடம் கேட்கவில்லை.

தற்செயலாக தெரியாமல் வந்தால் கூட திரும்பி போய் விடுங்கள் எனக் கும்பிட்டு கேட்டுக்கொண்டார்.

போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரின் இந்த நடவடிக்கை இணையத்தில் பரவி வரும் நிலையில், அவருக்கு பலர் பாராட்டும் கூறி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே