சென்னையில் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து காவல்நிலையம் மூடப்பட்டுள்ளது.
சென்னை ஆலந்தூர் பகுதியில் வசிப்பவர், காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்துவருகிறார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் பணிபுரியும் காவல்நிலையத்தில் அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் முடிவுகள் நேற்று வெளிவந்த நிலையில் உதவி ஆய்வாளர் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அந்த காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு அந்த இடம் முழுவதும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டது.
மேலும் அவருடன் தொடர்பில் உள்ளவர்களை தனிமைப்படுத்தும் பணியும் நடைப்பெற்று வருகிறது.
சென்னையில் இதுவரை மொத்தம் 235 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதில், 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 53 பேர் குணமடைந்து உள்ளனர்.