கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக சிறைகளில் உள்ள கைதிகளை சந்திக்க 2 வாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள எட்டு மத்திய சிறைகள் மற்றும் கிளை சிறையில் உள்ள கைதிகளை சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
முன்பாக நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் தரப்பிலும் தமிழக அரசு தரப்பில் இருந்தும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தன.
தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கல்வி நிறுவனங்களை மூட வேண்டும்; மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் போன்ற பல்வேறு விதமான விஷயங்கள் இதில் குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக சிறைகளில் கைதிகள் சந்திக்கவும் இரண்டு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் சிறையில் உள்ள கைதிகளை சந்திக்க உறவினர்கள், வழக்கறிஞர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.