மார்ச் 18 ஆம் தேதி முதல் யெஸ் வங்கி வழக்கம்போல செயல்படும் – ரிசர்வ் வங்கி ஆளுநர்

யெஸ் வங்கி நாளை முதல் வழக்கம் போல் செயல்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் நேற்று மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், இந்திய வங்கித்துறை வலுவாகவும், பாதுகாப்பாகவும் உள்ளதாகக் கூறினார்.

கொரோனா வைரஸ் காரணமாக இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சுற்றுலா, விமான நிறுவனங்கள், விருந்தோம்பல் தொழில், உள்நாட்டு வர்த்தகம் போன்ற துறைகள் இழப்பை சந்தித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

நாளை முதல் யெஸ் வங்கி வழக்கம் போல் செயல்படும் என்றும்; யெஸ் வங்கி படிப்படியாக சிக்கலில் இருந்து மீட்கப்படும் என்றும் சக்தி காந்த தாஸ் கூறினார்.

யெஸ் வங்கியில் முதலீட்டாளர்கள் பணம் பாதுகாப்பாக உள்ளதாகவும்; வாடிக்கையாளர்கள் யாரும் தேவையற்ற கவலை கொள்ள வேண்டாம் எனவும் சக்தி காந்த தாஸ் கேட்டுக்கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே