தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42ஆக உயர்வு

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த 25 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று அதிகரிக்காமல் இருக்க சுகாதார ஊழியர்கள் கடுமையாக பணிபுரிந்து வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ராஜபாளையத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 

ராஜபாளையத்தை சேர்ந்தவர் மதுரை மருத்துவ கல்லூரியிலும், சென்னையை சேர்ந்தவர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரவித்துள்ளார்.

இவர்கள் வெளிநாடுகளுக்கு ஏதும் பயணம் செய்தாரா அல்லது வெளிநாட்டில் கொரோனா தொற்றுடன் வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தாரா என்ற எந்த விவரம் அதில் வெளியிடப்படவில்லை. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42-ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 2 லட்சத்து அதிகாமானோர் கண்காணிப்பில் உள்ளனர். 2 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே