மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் குழந்தை சுர்ஜித் சிக்கி உள்ள ஆழ்துளை கிணறுகளை பாறை நிறைந்த பகுதி என்பதால் மீட்பு பணிகள் சவாலாக இருப்பதாக ஐ.ஏ.எஸ்.அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மணப்பாறையில் நடைபெறும் மீட்பு பணிகளை ஆய்வு செய்ய வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது மீட்பு பணிகளை காண பொதுமக்கள் யாரும் சம்பவ இடத்துக்கு வரவேண்டாம் எனக் கோரிக்கை விடுத்தார்.
ஆல்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணிகளை விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் நேரில் வந்து பார்வையிட்டார்.
மீட்பு பணி நடைபெறும் இடத்தில் லேசான மழை பெய்வதால் அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
கூடியிருக்கும் மக்களை வீடுகளுக்கு செல்லுமாறு காவல்துறை அறிவுறுத்தி வருகிறது.கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், குழிக்குள் தண்ணீர் புகாமல் தடுக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
புதிய ரிக் எந்திரத்தின் 4 உதிரி பாகங்களை இணைக்கும் பணி இன்னும் 45 நிமிடங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குழந்தை சுர்ஜித் ஆல்துளை கிணற்றில் சிக்கியுள்ளதால், நடுக்காட்டுப்பட்டியை சுற்றியுள்ள 8 கிராம மக்களும் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.