தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்ததில் தம்பதி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் மழை பெய்து வருகிறது.

அவ்வப்போது பலத்த காற்றுடன் மழையும் பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து சேதமடைகின்றன.

கும்பகோணம் அருகே எலுமிச்சங்காபாளையம் சிவஜோதி நகரில் ஓட்டு வீடு வெள்ளிக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்தது.

இதில், வீட்டில் இருந்த குப்புசாமி (70), இவரது மனைவி யசோதா (65) பலத்தக் காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

குப்புசாமி – யசோதா

இதுகுறித்து கும்பகோணம் தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதேபோல தஞ்சாவூர் அருகே வடகால் கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டபாணி மனைவி சாரதாம்பாள் (83).

இவர் வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் மண் சுவர் இடிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த சாரதாம்பாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே