ஏப்.3 ஆம் தேதி ரேஷன் கடை செயல்படும்

ரேஷன் கடைகள் ஏப்ரல் 3 ம் தேதி வெள்ளிக்கிழமை செயல்படும் என கூட்டுறவுத்துறை தெரிவித்து உள்ளது.

தமிழக அரசு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வரும் 14 ம் தேதி வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக ரேஷன் கடைகள் மூலம் அனைத்து கார்டுதாரர்களுக்கும் ரூ. 1,000 நிதி உதவி மற்றும் ஏப்., மாதத்திற்கான பருப்பு, பாமாயில் உட்பட்டவைகள் இலவசமாக வழங்கப்படும் எனவும் , இலவச பொருட்கள் மற்றும் நிதி உதவி வரும் 2-ம் தேதி முதல் வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.

இதனையடுத்து ரேஷன்கடைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் வார விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை(ஏப்ரல் 3) தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. 

எனவும் இதற்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே