சேலத்தில் கொரோனா பரிசோதனை மையம் உடனடியாக அமைக்கப்படும் : அமைச்சர் விஜயபாஸ்கர்

சேலத்தில் கொரோனா பரிசோதனை மையம் உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தற்போது தெரிவித்திருக்கிறார்.

சீனாவின் உகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

உலகளவில் கொரோனா வைரசுக்கு இதுவரை 10,041 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,45,073 தாண்டியுள்ளது.

அதில், 88,151 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்து உள்ளது.

பலி 5 ஆக உயர்ந்து உள்ளது.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில் கூறி இருப்பதாவது, சேலத்தில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் செயல்படும். இந்த ஆய்வகம் உடனடியாக செயல்பட தொடங்கும்.

கொரோனா பரிசோதனை ஆரம்பமாகும் என கூறி உள்ளார்.

சென்னை, திருவாரூர், தேனி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் ஏற்கனவே கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

இது 5-வது கொரோனா பரிசோதனை மையம் ஆகும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே