கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக கேரள மாநில எல்லையோரத்தில் உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தின் அனைத்து சோதனைச் சாவடிகள் இன்று மாலை முதல் மூடப்படுகிறது.

கொரோனா பாதிப்பு எதிரொலியாக கோவையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனா்.

கோவை ரயில் நிலையம், காந்திபுரம், சிங்காநல்லூா், உக்கடம் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.

மாநகரப் பகுதி முழுவதும் சுகாதாரப் பணியாளா்களின் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, தூய்மைப் பணிகள், கிருமி நாசினி தெளிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகளை வரும் 31ஆம் தேதி வரை மூடுவதற்கு அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக கேரள மாநில எல்லையோரத்தில் உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தின் அனைத்து சோதனைச் சாவடிகள் இன்று மாலை முதல் மூடப்படுகிறது.

எனவே, கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கும், கேரள மாநிலத்தில் இருந்து கோயம்புத்தூர் மாவட்டத்திற்கும் அனைத்து வாகனம் தொடர்பு நிறுத்தி வைக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சி தலைவர் கு. இராசாமணி உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே