தமிழக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்த கூட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், சிறப்பு மருத்துவக்குழுவின் பரிந்துரைப்படி, ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும் தமிழகத்தில் தற்போதைய கொரோனா பாதிப்பின் நிலை மற்றும், சிகிச்சை முறைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
ஊரடங்கு உத்தரவால் வீடுகளுக்குள் முடங்கியுள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.