கொரோனா குறித்து அவதூறு பரப்பியதாக ஹீலர் பாஸ்கர் கைது..!

கொரோனா பற்றி வதந்தி பரப்பியதாக கைதான ஹீலர் பாஸ்கரை ஏப்ரல் 3- ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாட்ஸ் அப்பில் ஆடியோ மூலம் வதந்தி பரப்பியதாக ஹீலர் பாஸ்கர் மீது மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கோவை மாவட்டம் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் காவல்துறையினர் பொது சுகாதார சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹீலர் பாஸ்கரை கைது செய்தனர்.

அதைத் தொடர்ந்து ஹீலர் பாஸ்கரை காவல்துறையினர் கோவை மாவட்டம் ஏழாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

இதையடுத்து ஹீலர் பாஸ்கரை 15 நாட்கள் (ஏப்ரல் 3- ஆம் தேதி வரை) நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே