கோவிட் தொற்றுநோயால் (COVID-19) ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை குறித்த தனது “கடவுளின் செயல்” (Act of God) கருத்து குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) மீது தொடர்ந்து கேள்விகளால் சரமாரியாக தாக்கி வருகிறார், காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் (P. Chidambaram)

இன்று (செவ்வாய்க்கிழமை) “மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுக்கு கடவுளைக் குறை கூறக்கூடாது” என மத்திய அரசாங்கத்தை நேரடியாகவே தாக்கி பேசினார்.

என்டிடிவியுடன் பேசிய முன்னாள் நிதியமைச்சர் சீதாராமன், “இந்த நாட்டின் விவசாயிகளை ஆசீர்வதித்த” கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றார்.

“கடவுளைக் குறை கூற வேண்டாம். உண்மையில் நீங்கள் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். கடவுள் நாட்டின் விவசாயிகளை (Farmers) ஆசீர்வதித்தார்.

தொற்றுநோய் ஒரு இயற்கை பேரழிவு.

ஆனால் நீங்கள் ஒரு இயற்கை பேரழிவான தொற்றுநோயை மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவோடு சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று அவர் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

சிதம்பரத்தின் கருத்துக்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 23.9 சதவீதத்தை சுருக்கியதாகக் கூறப்பட்ட ஒரு நாள் கழித்து வந்துள்ளது. இது இந்த ஆண்டு பொருளாதாரம் மந்தநிலைக் கட்டத்தில் நுழைவதைக் குறிக்கிறது.

மத்திய அரசாங்கத்தின் ரூ .20 லட்சம் கோடி ஆத்மனிர்பார் நிதி தொகுப்பை ஒரு “நகைச்சுவை” (Atmanirbhar package a Joke) என்று அழைத்த ப.சிதம்பரம், “கடன் வாங்குவது, செலவழிப்பது, தேவையை அதிகரிப்பது, ஏழைகளின் கைகளில் பணத்தை வைப்பது, இதனால் நுகர்வு அதிகரிக்கும்” என்று கூறினார்.

முன்னதாக ஜிஎஸ்டி கவுன்சிலின் 41 வது கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman), பொருளாதாரம் ஒரு அசாதாரணமான சூழ்நிலையை எதிர்கொள்கிறது. இது “கடவுளின் செயல்” (Act of God).

இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் மந்தம் ஏற்படக்கூடும் எனக்கூறியிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே