ரேஷன் கடை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!

நியாய விலைக் கடை பணியாளர்கள் அனைவருக்கும் கட்டாயமாக இலவச கரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பொது முடக்க காலத்தில், பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை நியாய விலைக் பணியாளா்கள் போா்க்கால அடிப்படையில் வழங்கி வருகின்றனா்.

இந்தச் சூழலில் ஒருங்கிணைந்த நியாவிலைக் கடையில் பணியாற்றும் பணியாளா்களுக்கு நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே அவர்களுக்கு, உடனடியாக நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக முகக் கவசம், கிருமி நாசினி, சோப்பு, பாதுகாப்பு கவச உடை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில் கூட்டுறவுத்துறை சார்பில் அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் கட்டாயமாக கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் பணியாற்றும் பணியாளர்களில் யாரேனும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், மற்ற பணியாளர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும்.

அனைத்து நியாய விலைக்கடைகளிலும் போதுமான முகக்கவசம், கையுறை இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே